நேத்திர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
நேத்திர விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் நகராட்சி 14-வது வார்டுக்குட்பட்ட இந்திரா நகரில் எழுந்தருளிய நேத்திர விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிகளுக்கு புதிதாக கோவில் கட்டப்பட்டது. அதனை தொடர்ந்து கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு கோவில் வளாகத்தில் 2-ம் கால வேள்வி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. அதன்பிறகு 10 மணியளவில் பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் இருந்து பாரம்பரிய இசையுடன், கடவுள் வேடமணிந்த நடன கலைஞர்களுடன், வாணவேடிக்கைகள் முழங்க யானையில் வைத்து புனித நீர் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் நேத்திர விநாயகர் சிலைக்கு யானையை வைத்து புனித நீர் ஊற்றப்பட்டது. அதனை தொடர்ந்து கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்து கொண்டிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சுவாமிகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து அரசமரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story