கரூர் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி குறித்து புகாா் அளிக்க 1930 என்ற இலவச எண் அறிமுகம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 3 April 2022 11:21 PM IST (Updated: 3 April 2022 11:21 PM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி குறித்து புகாா் அளிக்க 1930 என்ற இலவச எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. என கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தகவல் தெரிவித்துள்ளார்.

கரூர், 
புகார் அளிக்க இலவச எண்
அறிவியல் அதிகமாக வளர்ச்சி பெற்று வரும் நவீன உலகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். இன்றைய சூழலில் ஒவ்வொரு நிகழ்விலும் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் ஆன்லைன் சம்பந்தமான பணபரிவர்த்தனை சமூக வலைதள கணக்குகளை கையாளும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 
ஆன்லைன் மூலமாக மோசடி செய்வோர் குறித்து தகவல் தெரிந்தாலோ அல்லது யாரேனும் பாதிக்கப்பட்டாலோ உடனடியாக சைபர் கிரைம் போலீசாருக்கு 1930 என்ற 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டணமில்லா தொலைபேசியிலோ அல்லது www.cybecrime.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் தகவல் தெரிவிக்கலாம். குறிப்பாக ஆன்லைன் பண மோசடி தொடர்பாகவும் தகவல் தெரிவிக்கலாம்.
ஓ.டி.பி. எண்ணை பகிர கூடாது
உங்களுக்காக உதவ சைபர் கிரைம் போலீசார் எப்போதும் தயாராக உள்ளனர். வேலை வாங்கி தருவதாக கூறி ஆன்லைன் மூலம் முன் பணம் செலுத்த வேண்டும் என யாராவது கூறினால் அதை நம்ப வேண்டாம். உங்கள் கைபேசிக்கு வரும் தவறான லிங்கை தொடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஒருவரின் இன்ஸ்டாகிராம் அல்லது அல்லது பேஸ்புக் ஐடி போல் மற்றொருவர் போலியான கணக்கு உருவாக்கி அதன் மூலம் தங்களிடம் அவசர தேவைக்காக பணம் கேட்கலாம் எனவே அதில் கவனமாக இருக்க வேண்டும்.
யார் என்று தெரியாத நபர் உங்கள் வங்கி கணக்கு அல்லது ஏ.டி.எம். கார்டு கால அவகாசம் முடிந்து விட்டது எனக்கூறி ஓ.டி.பி. எண்ணை கேட்டால் பகிர கூடாது. வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக்கில் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் வீடியோ கால் அழைப்புகளை ஏற்க வேண்டாம்.
ஓ.எல்.எக்ஸ் மூலம் ராணுவத்தில் பணிபுரிவதாக கூறி பொருட்களை குறைந்த விலையில் தருவதாக கூறி ஏமாற்றுபவர்களை நம்ப வேண்டாம், முன்னெச்சரிக்கையாக இருந்தால் நாம் ஏமாறாமல் இருக்கலாம். எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story