காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு மற்றும் சுங்க கட்டண உயர்வு போன்றவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி ராமநாதபுரம் அரண்மனை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமையில் நடை பெற்றது. திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கரு.மாணிக்கம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன், மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன், நகர் காங்கிரஸ் தலைவர் கோபி, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் செய்யது இப்ராகிம், வக்கீல் பிரிவு தலைவர் அன்புச்செழியன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்னேஸ்வரன், மகிளா காங்கிரஸ் தலைவி ராமலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட நிர்வாகிகள் காவனூர் கருப்பையா, வட்டார தலைவர்கள் காருகுடி சேகர், சேது பாண்டி உள்பட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story