நாட்டு நலப்பணி திட்ட முகாம்


நாட்டு நலப்பணி திட்ட முகாம்
x
தினத்தந்தி 3 April 2022 11:30 PM IST (Updated: 3 April 2022 11:30 PM IST)
t-max-icont-min-icon

நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது

காரைக்குடி, 
காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் இலுப்பக்குடியில் நடைபெற்றது, நிகழ்வில் பேராசிரியை ஜெயமணி, ஆண் சமூகமே என் பாதுகாப்பு -உன் கடமை என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்பொழுது பெண்களின் மீதான வன்மம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இது சமூகத்தில் மிகப்பெரிய ஆபத்து எனச் சுட்டிக்காட்டி பெண்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ஒவ்வொரு ஆணுக்கும் உள்ளது என பேசினார். முன்னதாக நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் வித்யாபாரதி வரவேற்றார். அழகப்பா அரசுக்கல்லூரி பேராசிரியர் குமார் தலைமை உரையாற்றினார்.

Next Story