குழந்தையுடன் பெண் மாயம்


குழந்தையுடன் பெண் மாயம்
x
தினத்தந்தி 3 April 2022 11:39 PM IST (Updated: 3 April 2022 11:39 PM IST)
t-max-icont-min-icon

குழந்தையுடன் மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.

வி.கைகாட்டி, 
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியை அடுத்த ஒரத்தூர் நடு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி சீதா (வயது 27). இவர்களுக்கு  ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி சீதா தனது 3 வயது மகளை அழைத்து கொண்டு அரியலூருக்கு ஆதார் அட்டை எடுக்க சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து கயர்லாபாத் போலீசில் அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்.

Next Story