குடிசை வீடு தீயில் எரிந்து நாசம்
குடிசை வீடு தீயில் எரிந்து நாசமானது.
ராமேசுவரம்,
பாம்பன் அக்காள்மடம் வடக்கு தெரு பகுதியில் வசித்து வருபவர் அனிதா.இவர் வசித்து வரும் குடிசை வீட்டில் நேற்று எதிர்பாராதவிதமாக திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. குடிசை வீடாக இருந்ததால் மளமளவென வீடு முழுவதும் தீ பரவியது. இதுகுறித்து தகவலறிந்ததும் மண்ட பத்தில் இருந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் வீட்டின் உள்ளே இருந்த குடும்ப அட்டை, ஆதார் அட்டை இறந்துபோன கணவரின் இறப்பு சான்றிதழ், வங்கியில் கடனாக வாங்கிய ரூ.30 ஆயிரம் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானது. பாம்பன் ஊராட்சி மன்ற தலைவர் அகிலா பேட்ரிக், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் பேட்ரிக் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
Related Tags :
Next Story