சிங்கம்புணரி அருகே மீன்பிடி திருவிழா


சிங்கம்புணரி அருகே மீன்பிடி திருவிழா
x
தினத்தந்தி 3 April 2022 11:43 PM IST (Updated: 3 April 2022 11:43 PM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி அருகே எருமைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மாஊருணியில் மூங்கிலால் ஆன ஊத்தாவை கொண்டு மீன்பிடிக்கும் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

சிங்கம்புணரி, 
சிங்கம்புணரி அருகே எருமைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மாஊருணியில் மூங்கிலால் ஆன ஊத்தாவை கொண்டு மீன்பிடிக்கும் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
மீன்பிடி திருவிழா
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எருமைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மாஊருணி உள்ளது. சுமார் 50 ஏக்கர் பரப்பிலான இந்த ஊருணியில் குத்தகைதாரர்கள் மூலம் மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் மிக முக்கியமாக மீன்பிடி சாதனமான மூங்கிலால் செய்யப்பட்ட ஊத்தாவை மட்டும் பயன்படுத்தி  மீன் பிடிக்க ரூ. 200 வீதம் வசூல் செய்யப்பட்டது. 
இந்த மீன்பிடித் திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் மீன்பிடி திருவிழாவிற்கு வந்து கலந்து கொண்டனர். இதில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர். கண்மாயில் போதுமான அளவு மீன் இல்லாததால் ஊத்தாவிற்கு பணம் கட்டியவர்கள் கண்மாயை குத்தகைக்கு எடுத்தவரிடம் பணத்தை திரும்ப கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே எஸ். எஸ். கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப் பட்டது. 
ஏமாற்றம்
தகவலை தொடர்ந்து எஸ்.எஸ் கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கூட்டத்தை கலைந்து போகச் செய்தனர். இதனால் மீன்பிடிக்க வந்தவர்கள் கண்மாய் ஒப்பந்ததாரரிடம் கட்டிய பணம் திரும்ப கிடைக்காமலும் மீன்கள் கிடைக்காமலும் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டது. 

Next Story