கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்


கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 4 April 2022 12:01 AM IST (Updated: 4 April 2022 12:01 AM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

களியக்காவிளை:
களியக்காவிளை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். 
 ரேஷன் அரிசி
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க போலீசார் சோதனைச்சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 
இந்தநிலையில், களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிந்தாமணி தலைமையிலான போலீசார் களியக்காவிளை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அதில் சிறு சிறு மூடைகளில் ஒரு டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
 கைது
இதையடுத்து ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தியதில் களியக்காவிளை அடுத்த கொல்லகுடியை சேர்ந்த விஷ்ணு (வயது 39) என்பதும், ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. 
அதை தொடர்ந்து விஷ்ணுவை கைது செய்த போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

Next Story