போர்வெல் கட்டணம் அடிக்கு ரூ.15 உயர்த்த முடிவு தமிழ்நாடு ரிக் உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அறிவிப்பு


போர்வெல் கட்டணம் அடிக்கு ரூ.15 உயர்த்த முடிவு தமிழ்நாடு ரிக் உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அறிவிப்பு
x
தினத்தந்தி 4 April 2022 12:05 AM IST (Updated: 4 April 2022 12:05 AM IST)
t-max-icont-min-icon

போர்வெல் கட்டணம் அடிக்கு ரூ.15 உயர்த்த முடிவு தமிழ்நாடு ரிக் உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அறிவிப்பு

எலச்சிபாளையம்:
டீசல் விலையை குறைக்க வேண்டும், மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும், ஜி.எஸ்.டி.யில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரிக் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 3 நாள் வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. 
வேலை நிறுத்த போராட்டம் முடிந்ததையடுத்து திருச்செங்கோடு ரிக் உரிமையாளர் சங்க ஆலோசனை கூட்டம் திருச்செங்கோட்டில் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு ரிக் உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் லட்சுமணன் கலந்து கொண்டு பேசுகையில், தற்போது டீசல் விலை உயர்வால் ஒவ்வொரு ஆழ்துளை கிணறு அமைக்கும் போதும் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்படுகிறது. எனவே அந்தந்த பகுதிக்கு ஏற்றவாறு 15 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விலை உயர்த்த முடிவெடுத்துள்ளோம்.
திருச்செங்கோடு பகுதியை பொறுத்தவரை இங்குள்ள ரிக் வண்டிகள் அடிக்கு 15 ரூபாய் உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். அரசு எங்களது கோரிக்கையை ஏற்று மீனவர்களுக்கு வழங்குவது போல் மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும் என பேசினார். இதில் திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் ஜெயக்குமார், உப தலைவர் சுப்பிரமணியம், உப செயலாளர் முருகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story