கோபி அருகே கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கோபி அருகே கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கடத்தூர்
கோபி அருகே கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கொடிவேரி அணை
கோபி அருகே பவானி ஆற்றின் குறுக்கே கொடிவேரி அணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கும்போது கொடிவேரி அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.
அதேபோல் தற்போது பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் கொடிவேரி அணையில் அதிக அளவு தண்ணீர் விழுகிறது. இதுபற்றி அறிந்ததும் இங்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். மேலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தங்கள் குழந்தைகளுடன் வேன், கார், பஸ் போன்ற வாகனங்களில் வந்திருந்தனர்.
மீன் வறுவல்
அவர்கள் அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தார்கள். பின்னர் தாங்கள் கொண்டு வந்திருந்த உணவுப் பதார்த்தங்களை அங்குள்ள பூங்காவில் வைத்து சாப்பிட்டு சென்றனர்.
அணை பகுதியில் விற்கப்படும் சூடான மீன் வறுவலை வாங்கி ருசித்து சாப்பிட்டனர். சுற்றுலா பயணிகள் வருகையையொட்டி கடத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story