கோபி அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதல்; டிரைவர் சாவு- வாலிபர் படுகாயம்
கோபி அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
கடத்தூர்
கோபி அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
விபத்து
கோபி அருகே உள்ள சாணார்பாளையத்தை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 21). இவர் டிரைவராக வேலை செய்து வந்தார். திருமணமாகவில்லை. முனிராஜ் நேற்று முன்தினம் இரவு புதுக்கரைப்புதூர் அம்மன் கோவில் திருவிழாவில் கம்பம் ஆடுதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் சாணார்பாளையம் நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
கொட்டையை காட்டூர் பிரிவு அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த கிருபாகரன் (21) என்பவரது மோட்டார்சைக்கிள் மீது முனிராஜின் மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.
சாவு
இந்த விபத்தில் முனிராஜும், கிருபாகரனும் தூக்கி வீசப்பட்டனர். இதில் முனிராஜ் படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே முனிராஜ் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த கிருபாகரன் கோபி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story