பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் விபத்தில் சிக்கிய காரால் விபத்து ஏற்படும் அபாயம்
பொள்ளாச்சி-உடுமலை ேராட்டில் விபத்தில் சிக்கிய காரால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் அந்த காரை அப்புறப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி-உடுமலை ேராட்டில் விபத்தில் சிக்கிய காரால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் அந்த காரை அப்புறப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
விபத்தில் சிக்கிய கார்
பொள்ளாச்சி-உடுமலை மெயின்ரோடு வழியாக உடுமலை, பழனி, ஒட்டன் சத்திரம், மதுரை, தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி உள்பட பல்வேறு ஊர்களுக்கு தினமும் ஏராளமான பஸ்கள், லாரிகள், வேன்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொள்ளாச்சி- உடுமலை மெயின் ரோடு மாக்கினாம் பட்டியில் உள்ள பி.ஏ.பி. அலுவலகம் அருகே விபத்தில் கார் சிக்கியது. ஆனால் அந்த கார் இதுவரை அகற்றப்படவில்லை. சாலை ஓரத்தில் கிடக்கிறது.
அகற்ற வேண்டும்
அந்த கார் அகற்றப்படாததால் அந்தப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அத்துடன் அங்கு விபத்து ஏற்படும் அபாய நிலையும் நீடித்து வருகிறது.
கார் கிடக்கும் பகுதி குறுகலானது என்பதால் அந்த வழியாக செல்பவர்கள் நிலைதடுமாறி அந்த கார் மீது மோத வாய்ப்பு உள்ளது. எனவே போலீஸ் அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து விபத்தில் சிக்கிய இந்த காரை உடனடியாக அங்கிருந்து அகற்றி வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story