கோபி மொடச்சூரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை; கணவர் மதுபழக்கத்தை கைவிடாததால் விபரீத முடிவு


கோபி மொடச்சூரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை; கணவர் மதுபழக்கத்தை கைவிடாததால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 4 April 2022 12:09 AM IST (Updated: 4 April 2022 12:09 AM IST)
t-max-icont-min-icon

கோபி மொடச்சூரில் கணவர் மது பழக்கத்தை கைவிடாததால் தூக்குப்போட்டு் பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவ

கடத்தூர்
கோபி மொடச்சூரில் கணவர் மது பழக்கத்தை கைவிடாததால் தூக்குப்போட்டு் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மதுபழக்கம்
கோபி அருகே உள்ள மொடச்சூரை சேர்ந்தவர் செல்வம். கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி லதா (வயது 28). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். செல்வத்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை லதா கண்டித்து வந்துள்ளார். ஆனால் செல்வம் மது பழக்கத்தை கைவிடவில்லை என தெரிகிறது.
இதனால் செல்வத்துக்கும், லதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு் வந்துள்ளது. அதேபோல் நேற்று முன்தினமும் கணவனுக்கும், மனைவிக்கும் இடையே தகராறு வந்துள்ளது.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் லதா மனமுடைந்தார். இந்த நிலையில் லதா யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் சேலையால் தூக்கு போட்டுக்கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே லதா இறந்தார்.
இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story