ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி


ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி
x
தினத்தந்தி 4 April 2022 12:09 AM IST (Updated: 4 April 2022 12:09 AM IST)
t-max-icont-min-icon

ரெயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்தார்

காரைக்குடி, 
காரைக்குடி ரெயில்வே இருப்புப்பாதை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ‌கல்லல்-தேவகோட்டை ரெயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத சுமார் 26 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். அவரின் முதுகின் பின்புறத்தில் ஒரு காயத் தழும்பும், இடுப்பு பகுதிக்கு கீழ் ஒரு மச்சமும், சிமெண்டு வெள்ளை கலர் கோடு போட்ட டீ-சர்ட் மற்றும் ஊதா நிற கலர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். இவர் குறித்து விவரம் தெரிந்த வர்கள் காரைக்குடி ரெயில்வே நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

Next Story