முஸ்லிம்கள் ரமலான் நோன்பு திறப்பு


முஸ்லிம்கள் ரமலான் நோன்பு திறப்பு
x
தினத்தந்தி 3 April 2022 6:47 PM (Updated: 3 April 2022 6:47 PM)
t-max-icont-min-icon

முஸ்லிம்கள் ரமலான் நோன்பு கடைபிடிக்க தொடங்கினர்.

பெரம்பலூர், 
முஸ்லிம்கள் ரமலான் மாதத்தின் 30 நாட்களிலும் நோன்பிருந்து 5 வேளை தொழுகை செய்வார்கள். மேலும் வானில் தோன்றும் பிறையை வைத்து ரம்ஜானுக்கு நோன்பு தொடங்கப்படுவது வழக்கம். பிறை தென்பட்டதால் ரமலான் மாதத்தின் முதல் தேதியான நேற்று முதல் முஸ்லிம்கள் நோன்பை கடைபிடிக்க தொடங்கினர். அதன்படி நேற்று மாலை பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் ரமலான் நோன்பினை திறந்தனர். அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story