கடை பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் மடிக்கணினி, செல்போன்கள் கொள்ளை


கடை பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் மடிக்கணினி, செல்போன்கள் கொள்ளை
x
தினத்தந்தி 4 April 2022 12:19 AM IST (Updated: 4 April 2022 12:19 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டையில் கடை பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள மடிக்கணினி மற்றும் செல்போன்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை திருவெண்ணெய்நல்லூர் சாலை பகுதியை சேர்ந்தவர் முகமது பிலால். இவர் அதே பகுதியில் செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த மடிக்கணினி மற்றும் செல்போன்களை மர்மநபர் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

வலைவீச்சு

 இதில் முகமதுபிலால் கடையை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர், கடைக்குள் புகுந்து அங்கிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள, மடிக்கணினி மற்றும் செல்போன்களை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர் ஒருவர் கடைக்குள் புகுந்து அங்கிருந்த மடிக்கணினி மற்றும் செல்போன்களை கொள்ளையடித்து சென்ற காட்சி பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story