130 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 12 பேர் கைது


130 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 12 பேர் கைது
x
தினத்தந்தி 4 April 2022 12:42 AM IST (Updated: 4 April 2022 12:42 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் 130 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் 130 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

புகையிலை பொருட்கள்

நெல்லையில் பள்ளி, கல்லூரி அருகில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரமூர்த்தி, முருகேசன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் விலக்கு பகுதியில் சோதனையில் நடத்தினர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற 6 பேரை பிடித்தனர்.

விசாரணையில், ஆலங்குளத்தை சேர்ந்த மகேஷ்குமார் (வயது 28), பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்த முனீஸ்வரன் (32), தச்சநல்லூரை சேர்ந்த வெள்ளபாண்டி (26), செல்வ விக்னேஷ் நகரை சேர்ந்த ராமலிங்கம் (45), பூலாங்குளத்தை சேர்ந்த லோகபாக்கியசெல்வன் (31), நெல்லை டவுன் வையாபுரி நகரை சேர்ந்த சதாசிவம் (19) ஆகியோர் என்பதும், வாகனங்களில் மொத்த விற்பனைக்காக புகையிலை பொருட்களை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

12 பேர் கைது

இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 110 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள், ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 600, ஒரு கார் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் பேட்டை எம்.ஜி.ஆர். நகரில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததாக வடக்கு தெருவை சேர்ந்த பைசல் கனி (37), முகைதீன் காட்டுபாவா (48) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 19 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி, புகையிலை பொருட்களை பதுக்கிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 740 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story