வாலிபரிடம் ரூ.1 லட்சம் மோசடி
வாலிபரிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:
விக்கிரமசிங்கபுரம் பசுக்கிடைவிளை பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 34). இவருக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது.
இந்த நிலையில் இவரது செல்போனுக்கு, குறுந்தகவல் ஒன்று வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் குறிப்பிடப்பட்ட லிங்கை கிளிக் செய்தால், உங்களது வங்கி கணக்கு அப்டேட் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த லிங்கை பாலசுப்பிரமணியன் கிளிக் செய்து உள்ளார். கிளிக் செய்தவுடன் மீண்டும் மீண்டும் கிளிக் செய்யுமாறு தகவல் வந்துள்ளது. உடனே அவர் தொடர்ந்து இரண்டு முறை கிளிக் செய்து உள்ளார்.
இதையடுத்து அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 800 எடுக்கப்பட்டதாக தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து வங்கியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, நாங்கள் எந்த தகவலும் அனுப்பவில்லை என வங்கி நிர்வாகம் தெரிவித்தது. இதுகுறித்த புகாரின் பேரில், நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story