மது விற்ற 4 பேர் கைது
மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வி.எம்.சத்திரம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்றதாக ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த மகாராஜன் (வயது 47) என்பவரை கைது செய்து 7 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.250-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மேலப்பாளையம் பெட்ரோல் பங்க் அருகே மது விற்றதாக முக்கூடலை சேர்ந்த பிச்சுமணி (42), பாளையங்கோட்டை கலைவாணி திரையரங்கம் அருகே மது விற்ற கீழ பாப்பாக்குடியைச் சேர்ந்த அன்புசெல்வன் (31), பெருமாள்புரம் ஆச்சிமடம் பஸ்நிறுத்தம் அருகே மது விற்றதாக விருதுநகர் மாவட்டம் சிவகாசி அல்லம்பட்டி சாலையைச் சேர்ந்த முத்துராஜ் (39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 53 மதுபாட்டில்களும், மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story