புகார் ெபட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ெதாற்றுநோய் பரவும் அபாயம்
மதுரை மாவட்டம் கோவில்பாப்பாக்குடி ஊராட்சி சத்யா நகா் பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீா் கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உருவாகி டெங்கு, மலேரியா போன்ற ெதாற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த கழிவுநீா் கால்வாயினை தூர்வார அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜசேகரன், கோவில்பாப்பாக்குடி.
விபத்து ஏற்படும் அபாயம்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் ராமச்சந்திரபுரம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி அருகே வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி இந்த பகுதியில் ேவகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கார்த்தி, வத்திராயிருப்பு.
தேங்கி நிற்கும் கழிவுநீா்
மதுரை மாநகா் பெத்தானியாபுரம் இந்திரா நகர் பகுதியில் கழிவுநீா் செல்ல வழியின்றி சாலையில் தேஙகி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் சாலையில் நடக்க பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதால் இப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடாக உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயினை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்கர், பெத்தானியாபுரம்.
கால்நடைகள் தொல்லை
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மெயின் சாலையில் கால்நடைகளின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். மேலும் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்துகளும் ஏற்படுகின்றது. வாகன ஓட்டிகளுக்கு தொல்லை தரும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருப்பசாமி பாண்டியன், முதுகுளத்தூர்.
சுகாதார சீர்ேகடு
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் கழிவுநீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் திறந்தநிலையில் உள்ளதால் சுகாதார சீர்கேடாக உள்ளது. இதன்மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்தொற்றுகளும் ஏற்படுகின்றது. மேலும் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள்சிரமப்படுகின்றனர். மக்கள் நலன் கருதி கழிவுநீர் கால்வாயை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணி, இளையான்குடி.
ஓடை தூர்வாரப்படுமா?
விருதுநகர் மாவட்டம் மல்லிப்புதூர் கிராமத்தில் உள்ள ஊருணிக்கு வருகின்ற நீர்வரத்து ஓடைபாதை பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் ஊருணிக்கு நீர்வரத்து தடைபட்டுள்ளது. மேலும், ஊருணியில் தண்ணீரின் இருப்பு குறைந்து வருவதால் இப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்படுகின்றது. எனவே, அதிகாரிகள் நீாவரத்துப்பாதையை தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள், மல்லிப்புதூர்.
Related Tags :
Next Story