இஸ்லாமியர்களின் புனித ரம்ஜான் நோன்பு தொடங்கியது
இஸ்லாமியர்களின் புனித ரம்ஜான் நோன்பு நேற்று தொடங்கியதையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
தஞ்சாவூர்:-
இஸ்லாமியர்களின் புனித ரம்ஜான் நோன்பு நேற்று தொடங்கியதையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
ரம்ஜான் நோன்பு
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும். இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் முழுவதும் 30 நாட்களுக்கு நோன்பு கடைபிடிக்கப்படும். இதையடுத்து பிறை தெரிந்ததும் அடுத்தநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான ரம்ஜான் நோன்பு நேற்றுஅதிகாலை தொடங்கியது.
முன்னதாக ரமலான் மாத முதல் பிறை நேற்றுமுன்தினம் தென்பட்டதை தொடர்ந்து இரவு சிறப்பு தொழுகை அனைத்து பள்ளி வாசல்களிலும் நடைபெற்றது. நேற்றுஅதிகாலை 4 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை உண்ணாமலும், நீர் பருகாமலும் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்தனர்.
தொழுகை
பின்னர் மாலையில் பள்ளி வாசல்களில் தொழுகை நடைபெற்றது. தஞ்சை காந்திஜிசாலை ஜூம்மா பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் நோன்பை முடித்து கொண்டு நோம்பு கஞ்சியை குடித்தனர்.
இதேபோல் தஞ்சை அய்யங்கடைத்தெரு, மேலஅலங்கம், வடக்குவீதி, சேப்பனாவாரி, பாம்பாட்டித்தெரு, மானம்புச்சாவடி, விசிறிகாரத்தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story