பால்வண்ண நாதர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ண நாதர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் ஒப்பனையம்மாள் சமேத பால்வண்ணநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பிரம்மோற்சவ திருவிழா தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில் சுவாமி, அம்பாள் காலை, மாலை இருவேளைகளிலும் வீதி உலா வருதல் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிகர நிகழ்ச்சியாக 13-ந் தேதி (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story