விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
காரியாபட்டி,
காரியாபட்டி சி.இ.ஓ.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. சி.இ.ஓ.ஏ. கல்விக் குழுமத்தின் நிறுவனத்தலைவர் ராஜா கிளைமாக்சு விழாவினை தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில், கல்லுப்பட்டி ஊராட்சி தலைவர் லெட்சுமணன் கலந்து கொண்டனர். காரியாபட்டி பள்ளி மற்றும் கல்லூரி தாளாளர் பாரதி பிரேம்சந்த், சி.இ.ஓ.ஏ. கல்விக் குழுமத்தின் துணைத்தலைவர் ஜெயச்சந்திர பாண்டி, காரியாபட்டி கல்லூரி முதல்வர் ஜெனிட்டா, காரியாபட்டி பள்ளி முதல்வர் பழனிவேல் ராஜன் விழாவினை நடத்தினர்.
இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 1,400 மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் அருப்புக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ், காரியாபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மூக்கன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
Related Tags :
Next Story