‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மயான கொட்டகை சீரமைக்கப்படுமா?
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஆழியவாய்க்கால் ஊராட்சி தெற்கு நத்தம் கிராமத்தில் மயான கொட்டகை உள்ளது. இந்த கொட்டகை மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் இறந்தவர்களை தகனம் செய்ய சிரமமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயான கொட்டகை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
-கிராமவாசிகள், தெற்கு நத்தம்.
வழிகாட்டி பலகை வேண்டும்
பட்டுக்கோட்டையில் கைகாட்டி பஸ்நிறுத்தம் அருகே 4 சாலை சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பின் வழியாக மன்னார்குடி, கும்பகோணம், நாகை, திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மக்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் 4 சாலை சந்திப்பில் மேற்கண்ட ஊர்களுக்கு செல்லுவதற்கான வழிக்காட்டி பலகை இல்லை. இதனால் மேற்கண்ட பகுதிகளுக்கு வழி தெரியாமல் நீண்ட தூரம் சென்று வருகின்றனர். இதனால் வெளியூரில் இருந்து வரும் வாகனஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைகாட்டி பஸ்நிறுத்தத்தில் வழிகாட்டி பலகை வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ரவிச்சந்திரன், பொன்னவராயன்கோட்டை.
Related Tags :
Next Story