விருப்ப ஓய்வு பெற்ற கர்நாடக ஐ.பி.எஸ். அதிகாரி ஆம் ஆத்மி கட்சியில் சேருகிறார்
விருப்ப ஓய்வு பெற்ற கர்நாடக ஐ.பி.எஸ். அதிகாரி பாஸ்கர்ராவ் டெல்லியில் இன்று ஆம் ஆத்மி கட்சியில் சேருகிறார்.
பெங்களூரு:
கர்நாடக போலீஸ் துறையில் கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்தவர் பாஸ்கர்ராவ். அவர் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனராகவும் பணியாற்றினார். இந்த நியைில் அவர் தனக்கு விருப்ப ஓய்வு வழங்குமாறு கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்து இருந்தார். இந்த நிலையில் அவருக்கு கடந்த வாரம் விருப்பு ஓய்வு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் ஐ.பி.எஸ். அதிகாரி பாகஸ்கர்ராவ் இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அக்கட்சியில் சேருகிறார். இதில் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். ஆம் ஆத்மி கட்சியில் சேர உள்ள பாஸ்கர்ராவ் அடுத்த ஆண்டு (2023) கர்நாடகத்தில் நடைபெறும் நடைபெறும் சட்டசபை பொது தேர்தலில் அக்கட்சி சார்பில் பெங்களூருவில் போட்டியிடுவார் என தெரிகிறது.
Related Tags :
Next Story