நாளை மின்தடை
நாட்டார்மங்கலம், காந்தி நகர் பகுதியில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
மதுரை,
மதுரை நாட்டார்மங்கலம் துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், அந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் நாட்டார்மங்கலம், செங்கோட்டை, தட்சனேந்தல், இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம், கொட்டம்குளம், இடையப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் ராஜா காந்தி தெரிவித்துள்ளார்.
ஆனையூர் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே காந்தி நகர், பாலமுருகன் நகர், ராமமூர்த்தி நகர், பழைய விளாங்குடி, கணபதிநகர், செம்பருத்திநகர், வி.எம்.டபிள்யூ. காலனி மற்றும் இதர பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மதுரை அரசரசடி மின்செயற்பொறியாளர் ஒ.கே.பிரகாஷ்பாபு தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story