கோபி உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.73¼ லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை


கோபி உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.73¼ லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை
x
தினத்தந்தி 4 April 2022 2:13 AM IST (Updated: 4 April 2022 2:13 AM IST)
t-max-icont-min-icon

கோபி உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.73¼ லட்சத்துக்கு காய்கறிகள்

கோபி
கோபி உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.73¼  லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனையானது.
உழவர் சந்தை
கோபி அருகே மொடச்சூரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. கோபி, நாதிபாளையம், காமராஜ் நகர், செட்டியாம்பாளையம், கொளப்பலூர், வெள்ளாங்கோவில், சுண்டப்பாளையம், அயலூர் மற்றும் கோபியைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களுடைய காய்கறிகளை விற்பனைக்காக இங்கு கொண்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் கடந்த மாதம் விவசாயிகள் 2 லட்சத்து 86 ஆயிரத்து 494 கிலோ காய்கறிகள், கீரை மற்றும் பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். 
40,837 பேர்  உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கிச் சென்றுள்ளனர். கடந்த மாதம் மட்டும் ரூ.73 லட்சத்து 29 ஆயிரத்து 284 ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனையானது.
கட்டணம் இல்லாமல்
மொடச்சூர் உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வரும் புதிய விவசாயிகள் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்காக சிட்டா, அடங்கள், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, முத்திரைத்தாள் அளவு கொண்ட புகைப்படம் 4  ஆகியவற்றை கொடுத்து உழவர்சந்தை நிர்வாக அதிகாரியிடம் வழங்க வேண்டும்.
மேலும் கோபியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தங்கள் காய்கறிகளை அரசு பஸ் மூலம் கட்டணம் இல்லாமல் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உழவர் சந்தையில் கடை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவசமாக குடிநீர் வசதி, மின்சார வசதி செய்யப்பட்டுள்ளதாக உழவர் சந்தை நிர்வாக அதிகாரி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Next Story