சித்தோடு அருகே லாரி மீது அரசு பஸ் மோதல்; கண்டக்டர் பலி- பயணிகள் உயிர் தப்பினர்
சித்தோடு அருகே லாரி மீது அரசு பஸ் மோதிக்கொண்ட விபத்தில் கண்டக்டர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் பயணிகள் உயிர் தப்பினர்.
பவானி
சித்தோடு அருகே லாரி மீது அரசு பஸ் மோதிக்கொண்ட விபத்தில் கண்டக்டர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் பயணிகள் உயிர் தப்பினர்.
கண்டக்டர்
திருப்பத்தூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் புறப்பட்டு திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை தர்மபுரி மாவட்டம் கடகத்தூர் பாவடி தெரு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 52) என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக கரியமங்கலம் இருமத்தூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (51) என்பவர் இருந்தார். பஸ்சில் 42 பேர் பயணித்தனர்.
இந்த பஸ் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் ஈரோடு மாவட்டம் சித்தோட்டை அடுத்த கங்காபுரம் அருகே சென்ற போது பவானியில் இருந்து பெருந்துறை நோக்கி சென்று கொண்டிருந்த செங்கல் பாரம் ஏற்றிச்சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றது.
சாவு
அப்போது லாரி டிரைவர் திடீரென பிரேக் பிடித்ததால் பஸ் நிலைதடுமாறி லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பஸ்சின் இடது பக்கத்தில் அமர்ந்திருந்த கண்டக்டர் சக்திவேல் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் லாரியை விட்டுவிட்டு் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார்.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதுபற்றி அறிந்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பித்து சென்ற லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story