சிவமொக்கா டவுனில் தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை


சிவமொக்கா டவுனில் தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை
x
தினத்தந்தி 4 April 2022 2:25 AM IST (Updated: 4 April 2022 2:25 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்கா டவுனில் தலையில் கல்லைப்போட்டு வாலிபரை கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

சிவமொக்கா:

வாலிபர் கொலை

  சிவமொக்கா டவுன் துங்காநகர் பத்மா டாக்கீஸ் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர்(வயது 30). தொழிலாளியான இவர், கடந்த 1-ந்தேதி இரவு தனது மைத்துனரான நரசிம்மலு என்பவருடன் சிவமொக்கா அரசு பஸ் நிலையம் அருகே நடந்து சென்றுள்ளார்.

   அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சந்திரசேகரை வழிமறித்து தகராறு செய்துள்ளனர். பின்னர் அவரை தாக்கி கீழே தள்ளி சந்திரசேகர் தலையில் கல்லை போட்டுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த சந்திரசேகர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே அங்கிருந்து மர்மநபர்கள் தப்பியோடிவிட்டனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

  இதுபற்றி தகவல் அறிந்த தொட்டபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் கொலையான சந்திரசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் முன்விரோதத்தில் சந்திரசேகரை, மர்மநபர்கள் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். இதற்கிடையே சந்திரசேகரின் மைத்துனர் தொட்டபேட்டை போலீசில் புகார் ஒன்று அளித்தார்.

  அதில் சந்திரசேகரை, பி.எச். சாலையில் உள்ள மதுக்கடையில் வேலை பார்த்து வரும் பரசுராம் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. அதனால் முன்விரோதத்தில் சந்திரசேகரை, பரசுராம் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொன்றிருக்கலாம் என்று புகார் அளித்தார். அதன்பேரிலும் தொட்டபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story