தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
தெரு விளக்கு அமைக்க வேண்டும்
நாகர்கோவில் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை மையம் உள்ளது. இந்த பகுதியில் தெருவிளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருவிளக்கு அமைக்க வேண்டும்.
-ஆன்றோ டெகோசிங் ராஜன், வேதநகர்.
சாலையை சீரமைக்க வேண்டும்
விளவங்கோடு பஞ்சாயத்துக்குட்பட்ட கோணச்சேரியில் இருந்து சூரியகோடுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சஜித், கோணச்சேரி.
தொற்றுநோய் பரவும் அபாயம்
மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட ஆசாரிதெரு பகுதியில் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பாய்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரின்ஸ், ஆசாரிதெரு, மணவாளக்குறிச்சி.
கழிவுநீர் ஓடை சீரமைக்கப்படுமா?
பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட 8-வது வார்டு பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் ரோடு, வடக்கு ரத வீதியில் கழிவுநீர் ஓடை உள்ளது. இந்த ஓடையில் குப்பைகள் நிறைந்து கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் ஓடையை சீரமைத்து, சாக்கடை வழிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.பரமசிவன், பூதப்பாண்டி.
மின்விளக்கு எரியவில்லை
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட சரக்கல்விளை ஹவுசிங் போர்டு பகுதியில் மின்கம்பம் உள்ளது. இந்த கம்பத்தில் கடந்த சில நாட்களாக மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. மேலும் மின்விளக்கு தொங்கிய நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஒரு வித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்விளக்கை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவலிங்கம், சரக்கல்விளை.
நடவடிக்கை தேவை
தேரூர் பேரூராட்சிக்குட்பட்ட எஸ்.பி.காலனி 13-வது தெரு உள்ளது. இந்த தெருவில் கடந்த சில மாதங்களாக பாறைப்பொடி கொட்டப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாறைப்பொடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜன், எஸ்.பி.காலனி.
Related Tags :
Next Story