ஹலால் விவகாரம்: சில அமைப்புகளின் விளையாட்டால் மக்கள் பாதிப்பு - மந்திரி ஈசுவரப்பா சொல்கிறார்


ஹலால் விவகாரம்: சில அமைப்புகளின் விளையாட்டால் மக்கள் பாதிப்பு - மந்திரி ஈசுவரப்பா சொல்கிறார்
x
தினத்தந்தி 4 April 2022 2:34 AM IST (Updated: 4 April 2022 2:34 AM IST)
t-max-icont-min-icon

ஹலால் விவகாரத்தில் சில அமைப்புகளின் விளையாட்டால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மந்திரி ஈசுவரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா கூறியதாவது:-

  சில தனி நபர்கள் மற்றும் அமைப்புகள், ஹலால், ஜட்கா இறைச்சி விவகாரத்தை உருவாக்கியுள்ளனர். சில அமைப்புகளின் விளையாட்டால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களின் கலாசாரத்தை பின்பற்ற அனுமதிக்க வேண்டும். முஸ்லிம்கள் ஹலால் சாப்பிட விரும்பினால் அதை அவர்கள் உண்ணட்டும்.

  இந்துக்கள் ஜட்கா இறைச்சி விரும்பினால் அதை சாப்பிடட்டும். அவரவர்களின் போக்கில் விட்டுவிட வேண்டும். இதை தான் சாப்பிட வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது. அனைத்து மாநிலங்களில் தோல்வி அடைந்து வரும் காங்கிரஸ் தான் இந்த ஹிஜாப், ஹலால் விவகாரத்தை ஏற்படுத்துகிறது. முஸ்லிம் மக்களை கவரும் செயலை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
  இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.

Next Story