மடாதிபதி சிவக்குமாரசாமிக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமருக்கு உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி; கர்நாடக ஐகோர்ட்டு நடவடிக்கை


மடாதிபதி சிவக்குமாரசாமிக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமருக்கு உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி; கர்நாடக ஐகோர்ட்டு நடவடிக்கை
x
தினத்தந்தி 4 April 2022 2:37 AM IST (Updated: 4 April 2022 2:37 AM IST)
t-max-icont-min-icon

மறைந்த மடாதிபதி சிவக்குமாரசாமிக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமருக்கு உத்தரவிட கோரிய மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

பெங்களூரு:
  
சிவக்குமாரசாமிக்கு விருது

  துமகூருவில் சித்தகங்கா மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் சிவக்குமார சாமி. நடமாடும் கடவுள் என்று வர்ணிக்கப்பட்ட அவர் கடந்த 2019-ம் ஆண்டு மரணம் அடைந்தார். இந்த நிலையில் சிவக்குமாரசாமிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த விருதுக்கு சிவக்குமாரசாமியின் பெயர் பரிசீலனை செய்யப்படவில்லை.

  இந்த நிலையில் சிவக்குமார சாமிக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமர் மோடிக்கு உத்தரவிட வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டில் துமகூருவை சேர்ந்த ரேகம் கான் என்பவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ண குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்து வந்தது.

அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது

  அந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில் நீதிபதிகள் தீர்ப்பு கூறினர். அப்போது பாரத ரத்னா உள்பட எந்த விருதையும் வழங்குவது குறித்து பரீசிலிப்பது இந்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்று நாங்கள் கருதுகிறோம்.

  பாரத ரத்னா என்பது தனிப்பட்ட நபர்களால் செய்யப்படும் சேவையை பாராட்டி வழங்குவது. இந்த விருது வழங்குவது ஜனாதிபதி, இந்திய அரசு, விருது வழங்கும் அமைப்பால் தீர்மானிக்கப்படுவது ஆகும். இதனால் விருது வழங்க நாங்கள் உத்தரவிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Next Story