விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதம்
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது
கன்னியாகுமரி,
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகளை இயக்கி வருகிறது. இந்தநிலையில், நேற்று வழக்கம் போல் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து கடல் சீற்றம் மற்றும் நீரோட்டம் தாழ்வு காரணமாக நிறுத்தப்பட்டது. சுமார் 2 மணி நேரம் தாமதமாக 10 மணி முதல் படகு போக்குவரத்து தொடங்கியது. சுற்றுலா பயணிகள் பொறுமையுடன் காத்திருந்து படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை கண்டு களித்தனர்.
.
Related Tags :
Next Story