கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 4 April 2022 3:49 AM IST (Updated: 4 April 2022 3:49 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பொன்மலைப்பட்டி:
திருச்சி பொன்மலை கணேசபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக  பொன்மலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த பகுதியில் ரோந்து சென்ற போலீசார், கணேசபுரம் பொதுக்கழிப்பிடம் அருகே கஞ்சா விற்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர், கணேசபுரம் 2-வது தெருவை சேர்ந்த சோனி என்ற சரத்(வயது 24) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிந்து கைது, அவரை செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story