உணவு பாதுகாப்பு அதிகாரி போல் நடித்து கடையில் ‘ஸ்வீட்' வாங்க முயன்றவர் கைது


உணவு பாதுகாப்பு அதிகாரி போல் நடித்து கடையில் ‘ஸ்வீட் வாங்க முயன்றவர் கைது
x
தினத்தந்தி 4 April 2022 3:49 AM IST (Updated: 4 April 2022 3:49 AM IST)
t-max-icont-min-icon

உணவு பாதுகாப்பு அதிகாரி போல் நடித்து கடையில் ‘ஸ்வீட்' வாங்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி:
திருச்சி அரசு மருத்துவமனை அருகே உள்ள ஒரு ஸ்வீட் கடைக்கு நேற்று மதியம் டிப்-டாப் உடை அணிந்த ஆசாமி ஒருவர் சென்றார். அவர் தன்னை உணவு பாதுகாப்பு அதிகாரி என்று கூறி கடை ஊழியர்களிடம் ரூ.1,000-க்கு ஸ்வீட் பார்சல் செய்யும்படி கூறினார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கடை ஊழியர்கள் அவரிடம் அடையாள அட்டையை காட்டும்படி கூறினர். அதற்கு அவர் அடையாள அட்டை எல்லாம் காட்ட முடியாது என்று கூறி அவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதையடுத்து அவரை பிடித்து அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த நபரிடம் விசாரித்தபோது, அவர் தென்னூர் பட்டாபிராமன்பிள்ளை தெருவை சேர்ந்த ரவி (வயது 48) என்பதும், அவர் உணவு பாதுகாப்பு அதிகாரி போல் நடித்து ஸ்வீட் வாங்க முயன்றதும் தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர்.

Next Story