பெரியகுளம் போலீஸ்நிலையத்தில் ஆலோசனை கூட்டம்
பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
பெரியகுளம்:
பெரியகுளம் போலீஸ் நிலையத்தில், பொதுமக்களின் வங்கி கணக்கிலிருந்து மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் நூதன முறையில் மோசடி செய்து பணம் பறிப்பதை தடுப்பது குறித்தும், மர்ம கும்பலிடம் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை மீட்பது எப்படி? என்பது குறித்தும் போலீசாருக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், வங்கி கணக்கில் நூதன முறையில் மோசடி செய்து பணம் பறிக்கும் கும்பலால் பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். செல்போனில் வங்கி ஏ.டி.எம்., ரகசிய குறியீட்டு எண் கேட்டு அழைப்பு வந்தால் அவர்களிடம் பதில் எதுவும் சொல்லாமல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதுபற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story