மகளின் திருமண செலவுக்கு பணம் திரட்ட முடியாத விரக்தியில் விஷம் குடித்து பெண் தற்கொலை
மகளின் திருமண செலவுக்கு பணம் திரட்ட முடியாத விரக்தியில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
வலங்கைமான்:-
மகளின் திருமண செலவுக்கு பணம் திரட்ட முடியாத விரக்தியில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
வலங்கைமான் அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
மகளின் திருமண செலவுக்கு...
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள வேளாக்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மனைவி சுமதி (வயது 40). இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகின்றன. 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
முருகானந்தம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக மனைவியை பிரிந்து சென்று விட்ட நிலையில் சுமதி மகன்கள், மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சுமதி தனது மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்து கடந்த சில நாட்களாக திருமண செலவுக்காக பணம் திரட்ட முயற்சி செய்து வந்தார்.
விஷம் குடித்து தற்கொலை
ஆனால் திருமணத்துக்கு தேவையான பணம் திரட்ட முடியாததால் விரக்தி அடைந்த சுமதி நேற்று முன்தினம் பூச்சி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சுமதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வலங்கைமான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story