கஞ்சா பதுக்கி வைத்திருந்த சாது கைது
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த சாது கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சாதுக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கிரிவலப்பாதையில் கஞ்சா விற்பனை நடப்பதாக திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து தாலுகா போலீசார் கிரிவலப்பாதையில் சோதனை நடத்தினர்.
அப்போது வாயு லிங்கம் கோவில் அருகில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த சாது ஒருவரிடம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் விற்பனைக்காக சுமார் 100 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்த பாக்கியநாதன் (வயது 52) எனத் தெரியவந்தது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சாது ஒருவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்துள்ள சம்பவம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story