புதிய மின் மயானம் அமைக்கப்படுமா?
கோத்தகிரி பகுதியில் புதிதாக மின்மயானம் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கோத்தகிரி
கோத்தகிரி பகுதியில் புதிதாக மின்மயானம் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
இடவசதி இல்லாத மயானம்
கோத்தகிரியில் கடைவீதி அருகே பொது மயானம் இருக்கிறது. ஆனால் அங்கு போதிய இடவசதி இல்லை. இதனால் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.
அதற்கு கோத்தகிரியில் இருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மின் மயானத்துக்கோ அல்லது வெலிங்டன் கன்டோன்மெண்ட் பகுதியில் உள்ள கியாஸ் சிலிண்டர் மூலம் எரியூட்டப்படும் மயானத்துக்கோ கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே கோத்தகிரியில் மின்மயானம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து இருக்கிறது.
வருவாய் கிடைக்கும்
இதுகுறித்து கோத்தகிரி பகுதி பொதுமக்கள் கூறியதாவது:- கோத்தகிரி கடைவீதி பகுதியில் செயல்படாத உழவர் சந்தை உள்ளது. இந்த இடம், பொது மயானத்தில் இருந்து 150 மீட்டர் தொலைவில்தான் உள்ளது. எனவே அந்த இடத்தில் மின் மயானம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் மூலம் பேரூராட்சிக்கு நிரந்தர வருவாய் கிடைக்கும். மேலும் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார 250-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன் அடைவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story