ஊருக்குள் புகுந்த புள்ளிமான் மீட்பு


ஊருக்குள் புகுந்த புள்ளிமான் மீட்பு
x
தினத்தந்தி 4 April 2022 7:49 PM IST (Updated: 4 April 2022 7:49 PM IST)
t-max-icont-min-icon

ஊருக்குள் புகுந்த புள்ளிமான் மீட்பு

பந்தலூர்

பந்தலூர் அருகே உப்பட்டி பஜாருக்குள் புள்ளிமான் ஒன்று புகுந்தது. இதை கண்ட தெருநாய்கள் துரத்த தொடங்கின. உடனே புள்ளிமான் ஓட்டம் பிடித்து, அருகில் இருந்த கோழி இறைச்சி கடைக்குள் புகுந்தது. இதுகுறித்து பிதிர்காடு வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர், புள்ளிமானை நீண்ட நேரம் போராடி மீட்டனர். அப்போது அது 2 வயதுடைய பெண் புள்ளி மான் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Next Story