மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 April 2022 8:05 PM IST (Updated: 4 April 2022 8:05 PM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிக்கல்:
நாகை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. 
கீழ்வேளூர் 
நாகை மாவட்டம் கீழ்வேளூர் கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை மாலி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர்கள் அபுபக்கர், முத்தையன், மாவட்ட குழு உறுப்பினர்கள் சிவகுமார், அம்பிகாபதி, பாண்டியன், துரைராஜ் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சுங்க சாவடி கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
சிக்கல் 
இதேபோல் சிக்கல் கடைத்தெருவில் நாகை ஒன்றியக்குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் வடிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
திருமருகல் 
திருமருகல் சந்தைப்பேட்டை கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு  கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் பாபு தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் ஜெயபால், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி, விவசாய சங்க ஒன்றிய தலைவர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுபாஷ்சந்திரபோஸ் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் பிரபாகரன், எரவாஞ்சேரி கிளை செயலாளர் சதீஷ் மற்றும் நிர்வாகிகள்  கலந்து கொண்டனர். முடிவில் ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பாலு நன்றி கூறினார்.
வாய்மேடு
வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் வெற்றியழகன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழுவை  சேர்ந்த கோவை சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 
தலைஞாயிறு
தலைஞாயிறு கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
கீழையூர் 
கீழையூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கீழையூர் கடைத்தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் அப்துல் அஜிஸ் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் மாரிமுத்து கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டகுழு உறுப்பினர் சித்தார்த்தன், ஒன்றியக்குழு உறுப்பினர் உமாநாத் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்துகொண்டனர்.

Next Story