நாகூர் வெட்டாற்று பாலம் மூடப்பட்டது
பராமரிப்பு பணி நாகூர் வெட்டாற்று பாலம் மூடப்பட்டது
நாகூர்:
நாகை மாவட்டம் நாகூரில் வெட்டாற்று பாலம் உள்ளது. காரைக்காலில் இருந்து நேரடியாக வேளாங்கண்ணிக்கு செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் நாகூர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று வந்தன. மேலும் கனரக வாகனங்களும் இந்த பாலம் வழியாக சென்று வந்தன. தற்போது இந்த பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. நேற்று நாகூர் வெட்டாற்று பாலம் இருப்பு தடுப்புகள் வைத்து மூடப்பட்டது. இதனால் நாகூர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து வாகனங்களும் நாகூர் வழியாக நாகைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story