பணமோசடி வழக்கில்- மந்திரி நவாப் மாலிக் நீதிமன்ற காவல் 18-ந் தேதி வரை நீட்டிப்பு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 4 April 2022 8:14 PM IST (Updated: 4 April 2022 8:14 PM IST)
t-max-icont-min-icon

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மந்திரி நவாப் மாலிக் நீதிமன்ற காவல் 18-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மும்பை, 
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சமீபத்தில் வழக்குப்பதிவு செய்து இருந்தது. இந்த வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை பதிவு செய்தது. இதில் மராட்டிய மந்திரி நவாப் மாலிக் தாவூத் இப்ராகிம் தொடர்புடையவர்களிடம் நிலம் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. 
இதையடுத்து தாவூத் இப்ராகிம் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் மந்திரி நவாப் மாலிக்கை கடந்த 23-ந் தேதி கைது செய்து விசாரித்து வந்தது.
பின்னர் மார்ச் 7-ந் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் கடந்த 21-ந் தேதி வரை அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரது காவல் 4-ந் தேதி (நேற்று) வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று அவர் பணமோடி தடுப்பு சட்டம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கோர்ட்டு அவரது நீதிமன்ற காவலை வருகிற 18-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
சிறையில் இருந்து தன்னை உடனடியாக விடுவிக்க கோரி மந்திரி நவாப் மாலிக் தாக்கல் செய்த இடைக்கால மனுவை ஐகோர்ட்டு நிராகரித்ததை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story