கர்நாடகத்தில் முககவசம் அணியும் உத்தரவு ரத்து குறித்து ஆலோசனை; மந்திரி சுதாகர் பேட்டி


கர்நாடகத்தில் முககவசம் அணியும் உத்தரவு ரத்து குறித்து ஆலோசனை; மந்திரி சுதாகர் பேட்டி
x
தினத்தந்தி 4 April 2022 8:53 PM IST (Updated: 4 April 2022 8:53 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் முககவசம் கட்டாயம் அணியும் உத்தரவை ரத்து செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்தார்.

பெங்களூரு:

சுதாகர் பேட்டி

  கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
  ஹலால் இறைச்சி குறித்து பிரமாண பத்திரம் வழங்கும் பணி சுகாதாரத்துறைக்கு தொடர்பு உடையது அல்ல. நாங்கள் அவ்வாறு எந்த பத்திரத்தையும் வழங்க மாட்டோம்.  நாங்கள் உணவு பாதுகாப்பு மற்றும் உணவு தானியங்களின் தரம் குறித்து மட்டுமே சான்றிதழை வழங்குகிறோம். கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து மராட்டியம் உள்பட 3 மாநிலங்களில் முககவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று கூறியுள்ளது.

ரத்து செய்வது குறித்து ஆலோசனை

  ஆனால் சில நாடுகளில் கொரோனா 4-வது அலை பரவி வருகிறது. கர்நாடகத்தில் தற்போது 90 சதவீதம் பேர் முககவசம் அணிவது இல்லை. இருப்பினும் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது இல்லை. கர்நாடகத்தில் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்வது குறித்து ஆலோசிக்கப்படும்.  ஒமைக்ரான் வைரசின் உருமாற்றம் அடைந்த புதிய வைரஸ் சீனா உள்ளிட்ட நாடுகளில் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை கர்நாடக அரசு கவனத்தில் கொண்டுள்ளது.
  இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.

Next Story