பூங்காவில் நடைபயிற்சி செல்லும் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது
பூங்காவில் நடைபயிற்சி செல்லும் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு:
பெங்களூரு ஜே.பி.நகர் பகுதியில் அக்கம்மாதேவி பூங்கா உள்ளது. அந்த பூங்காவில் காலை, மாலை நேரங்களில் பெண்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அந்த பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபடும் பெண்களை ஒருவர் தனது செல்போனில் ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுத்து உள்ளார்.
இதனை கவனித்த 2 பெண்கள் அந்த நபரின் செல்போனை வாங்கி பார்த்த போது அதில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்தது தெரியவந்தது. இதனால் அந்த நபரை பிடித்து ஜே.பி.நகர் போலீசில் பெண்கள் ஒப்படைத்தனர். விசாரணையில் அவரது பெயர் பிரசன்னா (வயது 59) என்பது தெரியவந்தது. அவர் மீது ஜே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story