வேலூர் அருகே எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை
வேலூர் அருகே எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர்
வேலூரை அடுத்த கம்மசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் என்ற கிருஷ்ணகுமார் (வயது 53). எலக்ட்ரீசியன். இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story