வேலூரில் 150 கிலோ குட்கா காருடன் பறிமுதல்


வேலூரில் 150 கிலோ குட்கா காருடன் பறிமுதல்
x
தினத்தந்தி 4 April 2022 10:09 PM IST (Updated: 4 April 2022 10:09 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் 150 கிலோ குட்கா காருடன் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர்

வேலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குப்பன் மற்றும் போலீசார் வேலூர் பழைய பைபாஸ் சாலை கால்நடை மருத்துவமனை அருகே வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 150 கிலோ குட்கா பல மூட்டைகளில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து கார் டிரைவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்த தீபாராமன் (வயது 32) என்பதும், பெங்களூருவில் இருந்து குட்கா கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். குட்கா எங்கு கொண்டு செல்லப்பட்டது. இதில், வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று போலீசார் தொடர்ந்து தீபாராமனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story