பள்ளிகொண்டா அருகே மனைவி இறந்த சோகத்தில் தொழிலாளி தற்கொலை
பள்ளிகொண்டா அருகே மனைவி இறந்த சோகத்தில் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
அணைக்கட்டு
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த வெட்டுவானம் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 42). இவரது மனைவி சம்பூரணம். இவர்களுக்கு மூன்று மகள், ஒரு மகன் உள்ளனர். உதயகுமார் அந்தப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பூரணம் உடல்நலம்பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
மனைவி இறந்த சோகத்தில் உதயகுமார் வேலைக்கு செல்லாமல் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார். அவரை பள்ளி கொண்டா ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே உதயகுமார் இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து அவரது மகன் நவீன்குமார் கொடுத்த புகாரின் பேரில் பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து.விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story