குடியாத்தத்தில் சிலிண்டருக்கு பாடை கட்டி ஒப்பாரி வைத்து போராட்டம்
குடியாத்தத்தில் சிலிண்டருக்கு பாடை கட்டி ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.
குடியாத்தம்
குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் பா.ஜ.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலி எரிவாயு சிலிண்டர்களை பச்சை ஓலையில் பாடைகட்டி மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். கண்டன ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளர் வீரமுனிராஜ் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
மாவட்ட பொருளாளர் விஜயேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பெண்கள் பாடையில் வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்களை கட்டிப்பிடித்து ஒப்பாரி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story