மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 387 மனுக்கள் பெறப்பட்டன
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 387 மனுக்கள் பெறப்பட்டன.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நிலஎடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி, பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டம் உள்ளிட்டவை தொடர்பாக மொத்தம் 387 பேர் மனுக்களை கொடுத்தனர்.
இந்த மனுக்களை பெற்ற நிலஎடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, இம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story